அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Aug 25, 2011

குகை வாசிகள்

அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

நூஹ் நபியின் கப்பல்

நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

Aug 24, 2011

தொழுகையை விட்ட என் சகோதரனே!

தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு
கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு

Aug 21, 2011

"இன்ஷா அல்லாஹ்" என்று கூறுவோம்!

  ‘நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!’ 
(அல்குர்ஆன் 18:23,24)

    குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

Aug 16, 2011

நோன்பு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டியவை

 நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1. நோன்பு திறக்கும் நேரம்:
    'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)
    '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது

Aug 15, 2011

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள்

நரகத்தில் நிரந்தரம் 
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77) 

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Aug 13, 2011

ரமலானும் அதன் மாண்பும்

இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும்.

‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. ‘சுட்டெரித்தல’ என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது.

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்

'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).

Aug 8, 2011

தடை செய்யப்பட்ட தீமைகள்

தொழுகையில் இமாமை முந்துதல்

முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

Aug 2, 2011

பாவங்கள் மன்னிக்கப்படும் ரமலான் மாதம்

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த

Jul 30, 2011

ரமலானின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் 

படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)


“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன.

Jun 23, 2011

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்


இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

Apr 3, 2011

இஸ்லாம் கூறும் அரசியல்

இன்றய உயர் அரசியல் அதிகாரம் தமிழர் கையிலா? அல்லது முஸ்லிம்கள் கையிலா? என்ற போட்டி நடக்கின்ற ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்சி பிறிதொரு கட்சிக்கெதிராய் வாக்களித்து அதற்கு சாவுமணி அடிக்குமாறு வேண்டி சமுதாயத்தில் தாண்டவமாடும் சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Feb 14, 2011

சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளும்

சொர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளும் ஓர் ஒற்றுமை உண்டு ஆனால் அதில் சிறிது வித்தியாசம் உண்டு. சொர்க்கவாசிகள் இன்முகத்துடன் அனுபவிப்பார்கள். நரகவாசிகள் தாங்கள் செய்த பாவத்தை எண்ணி வெறுப்புடன் அதை அனுபவிப்பார்கள்.
 
சுவர்க்க வாசிகள் 

Feb 11, 2011

மறுமை வாழ்வை நம்புவோம்

மண்ணிலிருந்து ஒரு மனிதனை படைத்து அவன் வாழ்வதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் படைத்தவன் இறைவன். இதனால் தான் இறைவனையும், மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைதூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலைவணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்கரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது

அல்லாஹ்வின் நிழல்


எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.

Feb 9, 2011

திருக்குர்ஆனில் உள்ள துவாக்கள்


திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும், துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற  துவாக்கள் உள்ளன அவற்றுள் சில

இஸ்லாம் கூறும் குடும்பம்


நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர்

Feb 8, 2011

தாடியும் அதன் முக்கியத்துவமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடியை வளர விடுங்கள்.  மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி5892
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : (முஸ்லிம் 435)

Feb 7, 2011

இறந்தவரிடம் கேட்டல்



 கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்பதை கப்ரு ஜியாரத் என்று கூறுகின்றனர். உண்மையில் கப்ரு ஜியாரத்தின் நோக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் இறந்தவரின் பொருட்டால் கேட்பது சரியா! அல்லது தவறா

கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

Feb 6, 2011

கருணை புகட்டுங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.

அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபியின் வருகை

ஈஸா நபி என்பவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.அவரைபற்றி அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகையில் நிச்சயமாக அவர் (ஈஸா ) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன்னில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன்

Feb 5, 2011

இறை நிராகரிப்பாளர்கள் யார்?


அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர வேறு நாயன் இல்லை .என்று
 இந்த விஷயத்தை மக்களிடம் எடுத்து விளக்க முஹம்மது(ஸல்) அவர்களை (இறுதி)  நபியாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்களைப்  பின்பற்றியவர்கள்   தான் நேர் வழிபெற்றவர்கள் எனவும் பின்பற்றாமல் புறக்கணித்தவர்கள் வழி கெட்டவர்கள் எனவும் அறிவித்திருக்கின்றான். இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதற்கான காரணங்களையும் இணைவைத்தல் இறை நிராகரிப்பு ஆகியவை பற்றியும் பலதிருவசனங்களில் எச்சரித்திருக்கின்றான்.

Feb 1, 2011

அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ்வின் கருணை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கருணை என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டும் பாசத்தை விட 99  மடங்கு கூடுதலாகும்.

நன்மையான  காரியம்
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் 

Jan 31, 2011

பிறந்தநாள்


நம் மக்களில் பெரும்பாலனோர் பிறந்தநாள் கொண்டாட கூடியர்களாக இருக்கின்றனர். ஆனால் உண்மையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது  இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து 
மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான 
காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் 
பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.


பெண்கள் மழித்துக் கொள்ளுதல்


பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

Jan 30, 2011

அல்லாஹ்வை நம்புதல்


 அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம்யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வதுஅவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும்அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள்சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்  ­­ 

Jan 28, 2011

பொறாமை கொள்பவன்

மனிதன்  தன்னிடம் இல்லாத  ஏதோ ஒன்று திறமையோ அல்லது பணமோ அதை பிறரிடம் காணும் போது அவர் மீது பொறாமை கொள்கிறான். அதை அல்லாஹ் தான் அவர்களுக்கு  கொடுத்திருக்கிறான் என்பதை அவர்கள் உணரவில்லை. இத்தகைய மனோநிலை மனிதனிலே காணப்படும் மிகவும் இழிவான பண்பாகும். தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை, உயர்வுகளை அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதர்களுக்கிடையிலான உறவுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்து விட முடியும்.

Jan 26, 2011

செய்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்  உரித்தானது
உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தலும்  கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நரகத்திற்கு செல்லும் வழி

அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனுக்கும்,  நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிகளுக்கும்  வேட்டு வைத்து விட்டு மார்க்கத்துக்கு முரண்பட்ட விசயங்களையும் விவகாரங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மூட நம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் அரங்கேற்றிவிட்டு அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தி வழிபாடு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் மத்தியில் மலிந்து போகியுள்ள ஷிர்க், பித்அத்களை கண்டித்து தூய்மையான குர்ஆன் மற்றும் ஹதிஸ்களை  போதிக்கின்ற போது பகிரங்கமாகவே மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். சில ஆலிம்களும் உலமாக்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

பாலும் - குர்ஆனும்

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.

Jan 25, 2011

தர்கா வழிபடு இணை வைத்தலே

பாவங்களில் மிகப் பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணை வைத்தலாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அனைத்து  பாவங்களையும்  மன்னிகின்றான். ஆனால்   அவனுக்கு இணை வைத்தலை ஒருபோதும் மன்னிப்பதில்லை.தர்கா வழிபாடு என்பது மிகப்பெரும் இணை வைத்தலாகும். இன்று நம் மக்களில் சிலர் பள்ளிக்கு செல்வதை விட கப்ருகளுக்கும், தர்காகளுக்கும் செல்வதையே கடமை என  நினைக்கிறார்கள். இதனால் கிடைக்கும் பரிசு "நிரந்தர நரகமே" தவிர வேறு ஒன்றும் இல்லை .ஆகவே அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

Jan 24, 2011

தஜ்ஜால் வருகை

'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.
'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - (முஸ்லிம்).

Jan 22, 2011

தற்கொலையும் - இஸ்லாமும்

தற்கொலையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்தில்லை . சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனிஇயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

வட்டி வாங்குதல்

திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்” 
அல் குர் ஆன்(2:278,279)

Jan 21, 2011

சொர்க்கத்தில் வெள்ளிக்கிழமை

 இவ்வுலகில் வெள்ளிக்கிழமை தனி மகிமை இருப்பது போலவே மறுமையில் சொர்க்கத்திலும் இந்த தினத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்)சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு  
வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று

Jan 19, 2011

சுலைமான் நபியின் வரலாறு

சுலைமான் நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

உலகம்-மறுமை

உலகம் நமக்கு ! நாம் மறுமைக்கு!! .தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு,  பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக  உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.

Jan 18, 2011

கஃபா வரலாறு

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஃபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

மார்கத்தை விற்க்காதிர்கள்

  உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!  
(அல்குர்ஆன் 2:41)   
    தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. 
(அல்குர்ஆன் 5:44, 3:187, 3:199)

Jan 17, 2011

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு


திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ளும்  அவசியம் நமக்கு உள்ளது.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

Jan 16, 2011

கியாமத் நாளின் அடையாளங்கள்

மகளின் தயவில் தாய்..
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   
நூல்: புகாரி (4777, 50)    

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)    
நூல்: புகாரி (4777)  

பித் அத்

நமது மார்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால்  அது நிராகரிக்கப்படும்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி : (2697) , முஸ்லிம் (3242)

மரணத்திற்குப் பின் தொடரும் நன்மைகள்

இறந்தவர்களுக்கு தொடர்ந்து நன்மை கிடைக்க வேண்டுமானால் உயிருடன் இருக்கும்போதே நல்லறங்களைச் செய்தால் ,அது இறந்த பின்பும் அதன் நன்மை நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மரணித்த பின்பும் நன்மைகளை பெற்று தரும் செயல்கள் மூன்று 

நன்மை பயக்கும் நபிமொழி


அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போதுபாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்அது பாவமானதாக இருந்தால்அதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லைஎனினும்அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போதுஅல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை (புகாரிமுஸ்லிம்)

Jan 10, 2011

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது;... மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:53)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை:

ASSALAMU ALAIKUM 
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை:


இதற்கு முன் என்றுமே இருந்திரா...த அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும்.