அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Feb 7, 2011

இறந்தவரிடம் கேட்டல்



 கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்பதை கப்ரு ஜியாரத் என்று கூறுகின்றனர். உண்மையில் கப்ரு ஜியாரத்தின் நோக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் இறந்தவரின் பொருட்டால் கேட்பது சரியா! அல்லது தவறா

கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.
 
முதலாவது வகையினர் : 
அவ்­லியாவே என்னுடைய நோயைப் போக்குங்கள், எனக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தாருங்கள். என்று நேரடியாக கப்ரில் அடங்கியிருப்பவர்களிடமே கோரிக்கை வைப்பார்.

இரண்டாவது வகையினர்:
அவ்லி­யாவே அல்லாஹ்விடம் வாங்கித்தாருங்கள் என்று கேட்பார்கள். இவர்கள் நாம் நேரடியாகக் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான். இந்தச் சமாதியில் இருப்பால் கேட்டால் அல்லாஹ் உடனடியாகத் தருவான் என நம்பிக்கை வைத்துள்ளனர்.

மூன்றாவது வகையினர் :
அல்லாஹ்வே இந்த அவ்­லியாவின் பொருட்டால் என்னுடைய நோயைப் போக்குவாயாக. என்னுடைய நாட்டத்தை நிறைவேற்றுவாயாக என்று கேட்கின்றனர். அதாவது அவ்­யா இவர் பேசுவதை கேட்கவும் மாட்டார். பார்க்கவும் மாட்டார். மாறாக இறந்து போனவரின் பொருட்டால்  அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் தருவார் என நம்புகின்றனர்.
இதில் முதல் வகையினரை கப்ரு வணங்கிகளில் ஒரு பிரிவினரே காஃபிர்கள் என்று கூறுகின்றனர். இதனால் நாம் முதல் வகைக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மாறாக அவ்­லியாக்களின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்று நம்பலாமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அல்லாஹ்வை நாம் இறைநம்பிக்கை கொள்ளும் போதே அவன் நாடியதைச் செய்பவன் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ் யாருக்காகவும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் அல்லாஹ்வுக்கு கிடையாது.  யாராவது ஒருவன் இறைவன் இன்னாருக்காக கடமைப்பட்டுள்ளான். இன்னாரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தந்தாக வேண்டும் என்று கூறினால் அவன் இறைவன் நாடியதைச் செய்பவன் என்ற பண்பை மறுத்த காஃபிராவான்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது ''இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நினைத்தால் எனக்குக் கருணை புரிவாயாக!'' என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) வரியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில்,இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம்  (52020)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ''இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 6339)

 ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை. என்ற நபிகள் நாயகத்தின் சொல் நாம் இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை வைத்து அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஒருவன்  இறைவா இந்த அவ்­லியாவின் பொருட்டால் எனக்குத் தருவாயாக என்று கேட்டாலும், நாம் கேட்டால் அல்லாஹ் தரமாட்டான் அவ்லி­யா கேட்டால்தான் அல்லாஹ் தருவான் என்று நம்பினாலும் அவன் அந்த அவ்லியா அல்லாஹ்வை நிர்பந்திக்க முடியும் என்று நம்புகிறான். அல்லாஹ் அந்த அவ்லியாவிற்காக கடமைப்பட்டுள்ளான்
நாம் அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்டால் நமக்குத்  தராத அல்லாஹ் அந்த அவ்­லியா நமக்காக அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அவருக்காக நமக்குத்தரவேண்டிய தர்மசங்கடத்திற்குள்ளாகிறான் என்றே கருதுகிறார்.
இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்கள் நிச்சயமாக இறைவனை மறுத்த இணைவைப்பாளர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மேலும் அல்லாஹ்வின் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தன்னுடைய அருளை தான் நாடியோருக்கு வழங்குவதாகும். அவ்­யாவின் பொருட்டால் கேட்டால் தருவான் என்று நம்புவது அல்லாஹ்வின் மேற்கண்ட பண்பிற்கு எதிரானதாகும்.

இறந்தவரிடம் கேட்க கூடாது என்பதற்காக குர் ஆனில் உள்ள இறை வசனங்கள்  

அல்லாஹ் நாடியோருக்கு மட்டும் தனது அருளை வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ( 2 : 105)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (11 : 107)

''அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்'' என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.. தான் நாடியோருக்கு தன் அருளை அவன் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்
(3 : 73 , 74)

இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன், அறிந்தவன். (5 : 54)
நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின்  
கூலி­யை வீணாக்க மாட்டோம். (12 : 56)
ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான்  
(14 : 11)

இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (57 : 21)
வேதமுடையோர் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் தாம் சக்தி பெற மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக (உங்களுக்கு அருள் புரிந்தான்.) அருள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. தான் நாடியோருக்கு அவன் அதைக் கொடுப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (58 : 29)
 
இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (62 : 4 )

மேற்கண்ட வசனங்களி­ருந்து இறைவனை யாருக்கும் கடமைப் பட்டவன் அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்டால் இறைவன் தருவான் என்று நம்புவதால் அவர்கள் இறைவன் தன் அல்லாத ஒருவருக்கு கடமைப்பட்டவன் என்று தங்கள் செயல்களால் நிரூபிக்கின்றனர். எனவே இறந்தவரின் பொருட்டால் கேட்கும் கப்ரு வணங்கிகள் இணை வைப்பாளர்களே
 
கப்ரு ஜியாரத் என்பது மறுமை சிந்தனைக்காகத்தான்!!. இறந்தவரின் பொருட்டால் கேட்பதற்கு அல்ல.!!!

அபூஹுரைரா (ரரி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர் களும் அழுதனர். அப்போது அவர்கள், ''நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள். (முஸ்லி­ம் 1777)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் . அது மறுமையை ஞாபகமூட்டும்
அறிவிப்பவர் : அபூ குரைரா (ர­லி) இப்னுமாஜா (1558)

உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் போதுமானதாகும்

No comments:

Post a Comment