அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Feb 6, 2011

அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபியின் வருகை

ஈஸா நபி என்பவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.அவரைபற்றி அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகையில் நிச்சயமாக அவர் (ஈஸா ) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன்னில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.  
ஈஸா நபி
மறுமை
நாள் வரும் முன், 'வர உள்ளது' என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின் வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் வருவாரா? இது சாத்தியமாகுமாஎன்ற கேள்விகள் எழவே செய்யும்.

'
ஈஸா (அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்' என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு முன் வந்த 'தவ்ராத்' வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே வழங்கப்பட்ட 'இன்ஜீல்' வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின் இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு வந்த நபியான ஈஸா தான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின்வருகையும் அமைந்துள்ளது.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான்
- (அல்குர்ஆன் : 4:157,158).

'
அவரை அவர்கள் கொல்லவில்லை' என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம்அவர்கள் கொல்லப்படவில்லை என்பதோடு 'உயிருடன் உள்ளார்' என்பதும்விளங்கும். 'உயிருடன் எங்கே உள்ளர்கள்?' என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் கொண்டான் என்றும் அல்லாஹ் கூறிவிட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள் 'உயிருடன் வானில் உள்ளார்' என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் ஆவான். 

No comments:

Post a Comment