அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 25, 2011

தர்கா வழிபடு இணை வைத்தலே

பாவங்களில் மிகப் பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணை வைத்தலாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அனைத்து  பாவங்களையும்  மன்னிகின்றான். ஆனால்   அவனுக்கு இணை வைத்தலை ஒருபோதும் மன்னிப்பதில்லை.தர்கா வழிபாடு என்பது மிகப்பெரும் இணை வைத்தலாகும். இன்று நம் மக்களில் சிலர் பள்ளிக்கு செல்வதை விட கப்ருகளுக்கும், தர்காகளுக்கும் செல்வதையே கடமை என  நினைக்கிறார்கள். இதனால் கிடைக்கும் பரிசு "நிரந்தர நரகமே" தவிர வேறு ஒன்றும் இல்லை .ஆகவே அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)



இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும். அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும் அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்பதும் பொருளாகும். மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான். இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிக்காகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!
(அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)                 
இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்குஇணைக் கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார்
(திருக் குர்ஆன் 5:72) 
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக்  கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)      அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன்:39:65,66)
அல்லாஹ் கூறுகிறான்
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
 தர்கா வழிபாடு 


  
இறந்து போன அவுலியாக்கள் தம் தேவையை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும், நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று உதவி தேடுகின்றனர். பாதுகாப்பு தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே  செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) 
  
அல்லாஹ் கூறுகின்றான்:
"உமது இறைவன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்"  என விதித்துள்ளான் (அல்-குர்ஆன் 17 :23) 

அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் நல்லடியாகளிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டி பிராதிக்கின்றனர். (இதுவும் இணை வைத்தல் ஆகும்) 



    அல்லாஹ் கூறுகிறான் :

துன்பதிற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்கு பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களை பூமியில் பிரநிதிகளாய் ஆக்குபவன் யார்?   இப்பணியை செய்ய அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாக சிந்திக்கின்றீர்கள்.(அல்-குர்ஆன் 27 :62 )

இன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்களில்,துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவுலியக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலி, யா ஹுசைன், யா முஹையுத்தீன், யா ஷாதுலி, என்று அழைக்கின்றனர். 
ஆனால் அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எவர்களை அலைகின்றீர்களோ அவர்கள் உங்களை போன்றே அடியார்கள் தாம்.
  (அல்-குர்ஆன் 7 :194 )

சமாதிகளை வலிபடகூடியவர்களில்  சிலர் அவற்றை வலம்  வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிகட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேலும் அவற்றுக்கு தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாக்குதல், பிள்ளை பேரு கேட்டல், தங்களுடைய காரியங்களை  எளிதாக்குதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும்   தேவைகளையும் கேட்கின்றனர். விலகப்பட்டவைகளில் பொதுவாக இதுவே மிகப் பெரியதாகும்.  
அபூபக்கர் (ரலி) அறிவிப்பாவது 
பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே ! அறிவியுங்கள் என்றோம் . அதற்கு அவர்கள்  அல்லாஹ்விற்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுகள்! பொய் சொல்வதும், பொய் சாட்சி சொல்வதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா! என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்பத் திரும்ப கூரிக்கொண்டிருந்தார்கள். 
புகாரி (5967), (முஸ்லிம்)

எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான் இனைவைத்தலைத் தவிர! எனவே இணைவைத்தலுக்கு பிரத்தியேகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : " திண்ணமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டன். அதைத் தவிர ஏனையவற்றை அல்லாஹ் தான் நாடியர்களுக்கு மன்னித்து விடுவான் அல்-குர்ஆன் (4:48)
 
இந்த இணை வைத்தலில் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடக்கூடிய மிகப்பெரிய இணை வத்தலும் உண்டு. இத்தகைய இணை வைத்தலைச் செய்பவர் தவ்பா செய்யாமல் இறந்து விட்டால் நிரந்தர நரகத்தில் வீழ்வார். இத்தகைய இணை வைத்தலை சாதாரணமாக நினைத்துக்கொண்டு முஸ்லிம்கள் செய்கிறார்கள் இத்தகைய பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் மக்களையும்  காத்து அருள் புரிவானாக! ஆமின்
    

No comments:

Post a Comment