அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 16, 2011

நன்மை பயக்கும் நபிமொழி


அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போதுபாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்அது பாவமானதாக இருந்தால்அதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லைஎனினும்அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போதுஅல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை (புகாரிமுஸ்லிம்)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''அழ்பாஉ'' என்ற ஒட்டகை இருந்ததுஅதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது.
ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்துஅதை முந்திவிட்டார்இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும்அதை (ஒரு நேரத்தில்தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது'' என்று கூறினார்கள். (புகாரி)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு சாப்பிட்டால்மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள்.

உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூடஅதில் உள்ள அசுத்தத்தை நீக்கிஅதை சாப்பிடட்டும்ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம்'என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள்உங்கள் உணவில் எதில் ''பரக்கத்'' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''ஓர் ஆட்டின் காலின் கீழ் பகுதிஅல்லது தொடைப்பகுதி ஆகியவற்றை சமைத்து விருந்துக்கு என்னை அழைக்கப்பட்டாலும் நான் அதை ஏற்பேன். எனக்கு ஆட்டின் காலின் கீழ் பகுதியையோஅல்லது தொடைப் பகுதியையோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அஸ்வத் இப்னு யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நபி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வீட்டில் எப்படி நடந்து கொள்வார்கள்எனஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டதுதன் குடும்பத்தாருக்கு உதவி புரிவதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள்தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள். (புகாரி)

அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நானும்என் சிறிய தந்தையின் இரண்டு மகன்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தோம்அவ்விருவரில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களேஅல்லாஹ் உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள பகுதியில் எங்களை (அதிகாரியாகநியமியுங்கள்'' என்று கேட்டார்இன்னொருவரும் இதே போல் கூறினார்அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்''நிச்சயமாக நாம்அல்லாஹ்வின் மீது சத்தியமாகஇப்பதவியை கேட்கின்ற எவருக்கும்இதை ஆசை கொள்கின்ற எவருக்கும் இந்த அதிகாரத்தை வழங்கிட மாட்டோம்'' என்று கூறினார்கள் (புகாரிமுஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''ஒரு மனிதர்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினார்''நீர் கோபப்படாதீர்!'' என்று கூறினார்கள்அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். ''நீர் கோபப்படாதீர்!'' என்று பலமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி


No comments:

Post a Comment