அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Aug 25, 2011

குகை வாசிகள்

அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

நூஹ் நபியின் கப்பல்

நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

Aug 24, 2011

தொழுகையை விட்ட என் சகோதரனே!

தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு
கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு

Aug 21, 2011

"இன்ஷா அல்லாஹ்" என்று கூறுவோம்!

  ‘நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!’ 
(அல்குர்ஆன் 18:23,24)

    குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

Aug 16, 2011

நோன்பு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டியவை

 நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

1. நோன்பு திறக்கும் நேரம்:
    'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)
    '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது

Aug 15, 2011

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள்

நரகத்தில் நிரந்தரம் 
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77) 

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Aug 13, 2011

ரமலானும் அதன் மாண்பும்

இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும்.

‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. ‘சுட்டெரித்தல’ என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது.

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்

'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).