அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 28, 2011

பொறாமை கொள்பவன்

மனிதன்  தன்னிடம் இல்லாத  ஏதோ ஒன்று திறமையோ அல்லது பணமோ அதை பிறரிடம் காணும் போது அவர் மீது பொறாமை கொள்கிறான். அதை அல்லாஹ் தான் அவர்களுக்கு  கொடுத்திருக்கிறான் என்பதை அவர்கள் உணரவில்லை. இத்தகைய மனோநிலை மனிதனிலே காணப்படும் மிகவும் இழிவான பண்பாகும். தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை, உயர்வுகளை அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதர்களுக்கிடையிலான உறவுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்து விட முடியும்.

பொறாமை
யூதர்களிடம் காணப்படும் இம்மோசமான மனோநிலை பற்றி அல்குர்ஆன் கூறுகையில் வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதன் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பாளர்களாக திருப்பிவிட வேண்டும் என விரும்புகின்றனர். சத்தியம் தமக்குத் தெளிவாகி விடடதன்பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு முனைகின்றனர்). (அல்குர்-ஆன் 2 :109 ) 
 நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்  ''உங்களுக்கு முன்பிருந்த சமூகத்தினருக்கு ஏற்பட்ட பொறாமை, பகைமை போன்ற நோய்கள் உங்களையும் பீடிக்கும் பகைமை உணர்வு சிதைத்து விடக் கூடியது. அது மார்க்கத்தை சிதைத்து விடும். தலைமுடியை அல்ல, எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!'' அறிவிப்பவர்: ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) (ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ)

 நபி (ஸல்) அவர்கள்  ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ, புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (ஆதாரம் : அபூதாவூத்)

இவ்வாறு அல்குர்ஆனும், அல்ஹதீஸும் இதன் பாரதூரத்தை, சுபாவத்தை விளக்குகிறது. உண்மையில் இத்தகைய பொறாமை கொள்பவன் வாழ்கையில் முன்னேறுவதும் இல்லை.மறுமையில் அல்லாஹ்விடம் நன்மதிப்பும் பெறுவதில்லை. இம்மைலும் மறுமையிலும் பயன் தராத ஒன்றை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும். அதை தூக்கி எரிந்தது விட்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!

No comments:

Post a Comment