அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Aug 13, 2011

ரமலானும் அதன் மாண்பும்

இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும்.

‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. ‘சுட்டெரித்தல’ என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது.

ரமளான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.எழில்மிகு இஸ்லாமிய அடித்தளத்திற்கு வலிமையூட்டுவதில் நோன்புக்கு பெரும் பங்குண்டு. உள்ளத்தையும் உடலையும் ஒருசேரத் தூய்மையாக்கும் பேராற்றல் இஸ்லாமியர் கடைபிடிக்கும் நோன்புக்கு உள்ளது என்பதை அறிவியல் அறிஞர் களும், உளவியல் ஆய்வாளர்களும் மருத்துவ மேதைகளும் , ஒருமித்துக்கூறுகின்றனர்.

இறைவன் கடமையாக்கிய நோன்பின் மாண்பையும், வள்ளல் நபி(ஸல்) கடைபிடித்துவந்த நோன்பின் பக்குவ நிலையையும் இன்று உலகம் முழுவதும் உணரத் தொடங்கிவிட்டது. எனவே தான் முஸ்லிம்களுடன் வாழும் மாற்றுமத சகோதரர்களும் அதன் அருமை பெருமையை உணர்ந்து நோன்பு நோற்க ஆரம்பித்துவிட்டனர்.

நோன்பு எல்லா சமூகத்தாருக்கும் விதியாக்கப்பட்ட கடமை

நோன்பு என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கடமையல்ல. இதற்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தாருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களும் பண்டு தொட்டு நோன்பிருந்து வந்ததை அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டவாறே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டி ருக்கிறது. அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாகலாம் (2:183)

இறை தூதர்கள் யாவரும் நோன்பிருந்தனர்.

நபி நூஹ் (அலை) அவர்கள், ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ஆகிய இரு நாட்களைத்தவிர ஆண்டு முழுவதும் நோன்பு நோற்று வந்துள்ளனர்.

நபி தாவூது (அலை) வருடத்தில் பாதி நாட்கள் (அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள்) நோன்பு நோற்று வந்துள்ளனர்.

நபி இப்றாஹீம் (அலை) மாதத்தில் 13,14,15 ஆகிய அய்யாமுல் ஃபீளுடைய மூன்று நாடகள் நோன்பிருந்து வந்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் நோன்பு நோன்பு நோற்று வந்துள்ளனர்.

இவற்றிலிருந்து முன் வாழ்ந்த இறைதூதர்கள் யாவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டு அவர்கள் நோன்பிருந்து வந்ததை அறிய முடிகிறது.

நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?

நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு மத்தியில் (ஹி 18-வது மாதத்தில்) விதியாக்கப் படடது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 9 ஆண்டுகள் நோன்பிருந்து வந்தனர். அவர்களைப்பின்பற்றி உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் கடந்த 1430 ஆண்டு காலமாக விடாது நோன்பிருந்து வருகின்றனர். இதன் மாண்பினை உணர்ந்து ஏனைய மதத்தினர் எவரும் கடைபிடிக்காத இந்த நோன்பினை கடமையோடும் கட்டுப்பாடோடும் உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு நோற்பது உலகோரை வியப்பிலர்ழ்ததி வருகிறது.

நோன்பு எவ்வாறு கடமையாக்கப்பட்டது?

விசுவாசிகளே உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு விதியாக்கப்பட்தைப் போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக் கப்பட்டது ( 2:183) என்றவசனத்தின் மூலம் நோன்பு கடமையாக் கப்பட்டது.

இந்த வசனத்தின் மூலம் விரும்பியவர் நோன்பு நோறகலாம். விரும்பாதோர் ஒரு ஏழைக்கு உணவளத்தால் போது மானது என்ற விருப்ப உரிமை (சலுகை) வழங்பட்டிருந்தது. ஆயினும் உணவளிப்பதைவிட நோன்பு நோற்பதே மேலானதாகும்.

இஸலாத்தின் ஆரம்பகாலத்தில் மக்கள் பிரதி மாதம் மூன்று நாட்களும், முஹர்ரம் மாதம் 10-வர் நாளான ஆசூரா நாளிலும் நோன்பு நோன்பு நோற்று வந்தார்கள். பின்னர் ரமளானின் நோன்பு விதியாக்கப்பட்டதும் அவை தளர்த்தப்பட்டது.

ஆகவே , உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோறகட்டும் என்ற 2:185-வது வசனம் அருளப்பெற்றபோது விரும்பியவர்,விரும்பாதவர் என்ற சலுகை நீக்கப்பட்டு ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கவேண்டும் என கட்டாய மாக்கப்பட்டது.

உலக அமைதிக்கு உயர்ந்த வழி

இன்றைய உலகில ஒரு சாரார் உயர்ந்த நிலையிலும் மற்றொரு சாரார் தாழ்ந்த நிலையிலும் இருப்பதைக் காணுகிறோம்.இன்றைய உலக அமைதியின்மைக்கு இதுவே முக்கியக் காரணமாகும். இதனால் தான் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு ஒருவனை மற்றொருவன் அபகரிக்கிறான். ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கிறது. உலகில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதி யின்மை நிலவுகிறது. வறுமை என்னும் ஒன்று இல்லையெனில் உயர்வும் தாழ்வும் இல்லை.

வறுமையின் கொடுமையை நோன்பின் மூலம் தான் உணர முடியும். பசியால துன்புறும் ஒருவனுக்குத்தான் பசியின் கொடுமையை உணர இயலும். எனவே இல்லாருக்கு உள்ளோர் உதவி செய்யநோன்பு தூண்டுகிறது.

எனவே இம்மாதத்தில் செல்வந்தர்கள் இல்லாத ஏழைகளுக்கு அள்ளி அள்ளி வழங்குவதையும் நோன்பாளிக்கு வயிறார உணவளித்து மகிழ்வதையும் உலகெங்கணும் காணமுடிகிறது. இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பையும், அது உணர்த்தும் ஸகாத் என்னும் ஏழைவரியையும், ஸதகா என்னும் தர்மங்களையும் உலகம் பேணி நடந்தால் எங்கும் அமைதி நிலவும்.

நோன்பும் விஞ்ஞானமும்

உள்ளத்தை மட்டும் நோன்பு புனிதமாக்கவில்லை. உடலையும் அது சுத்தம் செய்கிறது. மனித உடலுக்குள் இருக்கும் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புக்கள் ஓயவின்றி இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு ஓய்வு மிகவும் அவசியம். அப்பொழுது தான் உடல் நலம் பெறும். இதற்கு சிறந்த வழி நோன்பு நோற்பது தான்.

முப்பது நாட்கள் நோன்பிருக்கும் மனிதனின் உள்ளுறுப்புக்கள் ஓய்வு பெற்றுச் சுத்தம் அடைகின்றன. பலவித நோய்களும் அவனை விட்டும் நீங்குகின்றன.

நீரிழிவுக்கும்,அல்சருக்கும் அருமருந்து

நீரிழிவைத் தவிர்ப்பதற்கு நோன்பு சிறந்த ஒன்றாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதைப்போலவே அல்சர் நோயினால் அவதிப்படுவோர் இந்த நோன்பினைக் கடைபிடித்தால் நூறு சதவிகிதம் குணமடைந்து விடுவதாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவரும் கூறியிருப்பது நோன்பின் மாணபினைக்காட்டுகிறது.

நீண்ட ஆயுளும், உடல் வலிமையும்

அண்மையில் ரஷ்ய நாட்டின் ரோசிரியர் ஒரு பெரும் உண்மையைத் தமது ஆராய்ச்சியின் மூலம் வெளியிட்டுள்ளார்.’ ஓவ்வொரு ஆண்டும் ஒரு மனிதன் முஸ்லிம்களைப் போல் நோன்பு நோற்றால் அவன் ஆயுள் அதிகரிக்கிறது.

30 நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலகீனமடைந்துவிடும் என்பது தவறான கருத்தாகும். டாக்டர் “சூ” என்னும் சைனா நாட்டு மருத்துவர் “உணவில்லாததால் இறந்தவர்களைவிட உணவு வேண்டாத வேளைகளில் உண்டு இறந்தவர்களே அதிகம்” எனகிறார்.

1911 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டில் 101 வயது நிறைந்த மரியன் கிராப்ட் 63 நாட்களும், 1931-ல் தென் ஆப்ரிக்காவில் திருமதி ஜி வர்க்கர் என்ற பெண்மணி 101 நாட்களும் நோன்பு வைத்து உடல் எடை குறைந்திருப்பதாகவும், பல நோய்கள் குணமடைந்திருப்ப தாகவும் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் செய்திகள் இஸலாத்தின் நோன்புகள் பற்றிய பல பேருண்மைகளை உணர்த்துகிறது.

நோன்பும் உளவியலும்

உளவியல் அடிப்படையிலும் நோன்பு உயர்ந்த இடத்தையே வகிக்கிறது. பெரும்பாலான நம் பண்புகள் பழக்கத்தால வருவன. ‘எறும்பூரக்கல்லுத் தேயும் என்பர்’ தமிழ் நாட்டினர்.இது உண்மையே! ஒரு செயலை நாம் தொடர்ந்து செய்தால் அது பழக்கம் ஆகிவிடுகிறது என்று உள நூல் அறிஞர்கள் உரைக்கின்றனர். விரலை வாயில் வைத்துசசப்பும் குழந்தை நாளடைவில் அதைப்பழக்கமாக்கிக் கொள்கிறது. அந்தப் பழக்கத்தைப் போக்க பெற்றோர் அரும்பாடு படுகின்றனர்.நோன்பு நோற்கும் ஒருவன். தான் சொல்லும் சொல்லில் உண்மையே பேசிப்பழகுகிறான்.செய்யும் செயல்களிலும் நன்மையையே இணைத்துப்பழகுகிறான். முப்புது நாட்கள் நோன்பிருக்கும் அவனிடம் நல்ல பழக்க வழக்கங்கள் அமைகின்றன. அவன் பண்புள்ளவனாகிறான்.

நோன்பின் வாயிலாக இத்துணைச்சிறப்புகளையும் மனிதன் பெறுகிறான். ஆதனால் தான் ரமளான் மாதத்தில் தன் அடியார்கள் நோன்பு நோற்க வேண்டுமென இறைவன் பின்வருமாறு கட்டளையிடுகிறான்.

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாறோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்’.(2:185)

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி பகர்வது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, இறை இல்லத்தைத் தரிசிப்பது (ஹஜ் செய்வது) ரமளான் மாதம் நோன்பு நோற்பது.(புகாரி)

‘ஸவ்மு’-தடுத்துக்கொள்ளல்.

நோன்பென்பது அல்லாஹ்வின் பால் நெருங்கும் எண்ணத்துடன் (நிய்யத்துடன்) உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அதிகாலை-பஜ்ரு- உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை தன்னைத் தடுத்துக் கொள்வதாகும். எனவே தான் நோன்பு என்னும் ஸவ்முக்கு- ‘அல்இம்ஸாக்‘ சாதாரண காலத்தில் ஆகுமாக்கப்பட்டதைக்கூட தடுத்துக்கொள்வதால் ‘தடுத்துக்கொளளுதல என்ற பெயர் ஏற்பட்டது.

யார் மீது கடமை?

இது புத்தி சுவாதீனமுள்ள, பருவ வயதை அடைந்த ஓவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டா யமாகும். பருவ வயதை அடைவதென்பது, பதினைந்து வயதை அடைவது அல்லது மறை விடத்தில் ரோமம் முளைப்பது அல்லது கனவில் இந்திரியம் வெளிப்படுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. பெண்ணுக்கு இன்னும் ஒருபடி அதிகமாக மாதவிடாய் ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. எனவே ஒரு சிறுவனுக்குஅல்லது சிறுமிக்கு இவற்றில் யாதேனும் ஒன்று ஏற்பட்டுவிட்டால் அவன்-அல்லது அவள் பருவ வயதைஅடைந்த வராகக் கருதப்படுவார்.

ரமளானின் மாண்புகள்

இந்த ரமளான் மாதத்தில் தான் வேதங்கள,; ஆகமங்கள் யாவும் அருளப்பட்டுள்ளன. நபி இப்றாஹீம் (அலை)அவர்களுக்கு ஸுஹ்ஃபுகள்-ஆகமங்கள்- ரமளான்பிறை ஒன்றிலும்,நபி மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத’; வேதம் ரமளான் பிறை ஆறிலும், நபி தாவூத (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் ரமளான் பிறை பன்னிரண்டிலும், நபி ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இஞ்சீல’; வேதம் ரமளான் பிறை பதினெட்டிலும், நபி (ஸல்) அவர்களுக்கு ‘குர்ஆன்’ வேதம் ரமளானின் ‘லைலத்துல் கத்ர்’ இரவிலும் அருளப்பட்டன.

இம்மதத்தில் தான் அல்லாஹ் அபரிமிதமான நற்கூலிகளை வழங்குகிறான். ஏராளமான அருட்கொடைகளை அடியார்கள் மீது பொழிகி;றான்.
இது நன்மைகளை நல்கி அருட்கொடைகளை அள்ளி வழங்கும் புனித மாதம்! வெகுமதிகளையும், அன்பளிப்புகளையும் வாரிவாரி வழங்கும் ஏற்றமிகு மாதம்!!

இந்த மாதத்தின் மகிமையை இறைவனே தனது திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்:

ரமளான் மாதம் எத்தகைய(மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், நன்மை தீமைகளை பிரித்தறிவக்கக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன்(என்னும் இவ்வேதம்)அருளப்பெற்றது…… ஆகவே யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (2:185)

இறைவனின் ஆணையைச் சிரமேற்தாங்கி முப்பது நாட்கள் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதன் மாண்பைப் பெறுகின்றனர்.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

மூன்று பகுதிகள் (மூன்று பத்துகள்)

‘இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.’

மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்பப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படு கின்றன. (நூல் : புகாரி )

இம்மாதத்தில் ‘சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுன்றன’ என்றால் ‘நல்லமல்கள் பெருகுவதற்கும், அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும் தான்!’
அவ்வாறே ‘நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன’ என்றால் – இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைவதற்காகவும், தீய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும் தான்!

ஷைத்தான்கள் விலங்கிட்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப் படுகிறார்கள்’ என்றால் ஷைத்தானின் தீய செயல்களிலிருந்து மாதம் முழுவதும் விலகி ஐம்புலன்களையும் அடக்கி ஆன்மீகப் பரிபக்கு வத்தைப் பெற்று பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்காகத்தான்! இம்மாதத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெறும் சிறந்த பயிற்சி ஏனைய மாதங்களிலும் தீமைகள் புரியாது மக்களைக் காத்து ஆண்டுமுழுவதும் தூய வாழ்வு வாழ துணை புரிகிறது.

ஏனைய மாதங்குளுக்கில்லாத சிறப்புகள்

வல்ல நாயன் அல்லாஹ் ரமளான் மாதத்திற்கு ஏனைய மாதங்களிற்கில்லாத பல சிறப்பம்சங்களை வழங்கியுள்ளான். அவற்றில் சில:

1. நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு. அவன் நெருக்கத்தை அதிகரிக்கிறது.
2. நோன்பு இறைநினைவை ஏற்படுத்துகின்றது
3. மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கிறது
4. ஷைத்தானின் ஊசலாட்டங்களை கட்டுப்படுத்கிறது.
5. உடல் நலனைப் பேணுகிறது
6. பாவத்திற்கு பரிகரமாகிறது

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஐங்காலத் தொழுகைகளும், ஒரு ஜும்ஆ தொழுகையிலிருந்து மறு ஜும்ஆத் தொழுகை வரை , ஒரு ரமளான் முதல் மறு ரமளான் வரை- பெரிய பாவங்களைத்தவிர்த்து சிறு பாவங்களுக்கு பரிகாரமாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

9. நோன்பாளியின் துஆ மறுக்கப்படுவதில்லை

.இறைவனால் அங்கீகரிக்கப்படும்.
நிச்சயமாக நோன்பாளி நோன்புதிறக்கும் வேளையில் கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ( ஸுனனு இப்னு மாஜா)
மூன்று பேரின் துஆ இறைவனால் ஏற்கப்படும்.

1. நோன்பாளியின் துஆ

2. அநீதம் செய்யப்பட்டவனின் துஆ.

3. பயணியன் துஆ. (பைஹகீ)

10. முந்தைய பாவங்கள் மன்னிக்கடுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.

(புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி).

11. ஐந்து அருட்கொடைகள் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்:-
வேறு எந்த சமுதாயத்தவருக்கும் கொடுக்கப்படாத ஐந்து சிறப்புக்கள் எனது சமுதாயத்தவருக்குக் கொழுக்கப்பட்டுள்ன..

1. நோன்பாளியின் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை உடையதாக இருக்கும்.

2. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவர்களுக்காக மலக்குகள்
பாவமன்னிப்புத் தேடுகின்னர்.

3. அல்லாஹ் தனது சுவர்க்கத்தை ஒவ்வொரு நாளும் அழகுபடுத்துகிறான். எனது
நல்லடியார்கள் தம் துன்பங்களையும், சிரமங்களையும் தாங்கிக் கொண்டு
உன்னிடம் வர இருக்கிறார்கள் என அதை நோக்கிக் கூறுகிறான்.

4. மூர்க்கத்தனமான iஷத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

5. ரமளானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
என்று நபிகளார் கூறியதும் அது லைலத்துல் கத்ருடைய இரவா எனக்
கேட்கப்பட்டது. இல்லை. வேலைசெயதவருக்குரிய கூலி அவரது வேலை முடிந்த பிறகு தானே வழங்கப்படுகிறது என்றார்கள் நபிகளார்(ஸல்)
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத், பஸ்ஸார்.

மேலும் அதன் மாண்புகளாவன:-

6. ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான மகத்துவமிக்க இரவு இதில் உள்ளது.

7. ரமளானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரக விடுதலை வழங்குகிறான்.

8. ரமளானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் சமமாகும்.

9. பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

ஆதமுடைய மகன் செய்கின்ற எல்லா நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகி றான்: நோன்பைத் தவிர.ஏனெனில் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன். (இப்னுமாஜா)

No comments:

Post a Comment