அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Feb 1, 2011

அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ்வின் கருணை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கருணை என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டும் பாசத்தை விட 99  மடங்கு கூடுதலாகும்.

நன்மையான  காரியம்
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் 
(அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்”
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி 

 அர்ஷின் நிழல்
“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு பேருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

அல்லாஹ்வின் அன்பு
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி. 

அல்லாஹ்வின் கருணை 
இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன்  4:25).
'..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். (
அல்-குர்ஆன் 5:74).
'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.' (அல்-குர்ஆன் 39:53)
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்-குர்ஆன்39:54)
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். (அல்-குர்ஆன்39:55)

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!
“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
 
பொறுமையாக இருப்பவர்களுக்கு பிரதிபலன் சொர்க்கம்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
 
நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை:
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி
 
நரகவாசிகளின் மீது கருணை
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாகஅதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள்.இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில்போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள்முளைப்பது போலப் பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாகஇருப்பதை நீர் பார்த்ததில்லையா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி)-(புகாரி-22 )

அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ்விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்துகொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக்கொடுப்பான். (அல்குர்ஆன்: 39:35)
 
குர்ஆனும் ஓரிடத்தில் இதனையே எடுத்துரைக்கிறது: ‘(கருணைமிக்கஇறைவனின் உண்மையான அடியார்களாகிய) அவர்கள் அல்லாஹ்வுடன்வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும் (கொலை செய்யக்கூடாதென) அல்லாஹ்வினால் தடைசெய்யப்பட்ட எந்த உயிரையும்நியாயமின்றி கொலை செய்வதில்லை. மேலும் விபச்சாரம் செய்வதில்லை. இந்தச் செயல்களைச் செய்தவன் யாராயினும் அவன் தன் பாவத்திற்கானகூலியைப் பெற்றே தீருவான். மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்புத்தண்டனை கொடுக்கப்படும். மேலும் அவன் இழிவுக்குரியவனாய் அதிலேயேஎன்றென்றும் வீழ்ந்து கிடப்பான். ஆனால் (இந்தப் பாவங்களுக்குப் பிறகு) எவன்மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டுநற்செயலும் செய்யத்தொடங்கினானோ அவனைத் தவிர! இத்தகையவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான். அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை மிக்கவனாகவும்இருக்கிறான் 
( அல்குர்ஆன் 25: 68 -70) 

சுவனவாசிகளின் யதார்த்த நிலை பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அவர்களின்உள்ளங்களில்படிந்திருந்தகுரோதங்களை நாம் அகற்றி விடுவோம். அவர்கள்ஒருவருக்கொருவர்சகோதரர்களாய் கட்டில்களில்எதிரெதிரேஅமர்ந்திருப்பார்கள்( அல்குர்ஆன் 15: 47)

ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) ...வர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள். (புகாரி-586)

 இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மைபுரியுமாறு ஏவுகிறார்கள்; தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும்! திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 9:71)   

கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களைவழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும்அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவாழ்வார்கள்! மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையானஇல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலானஅல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும். இதுவே மாபெரும்வெற்றியாகும்! (அல்குர்ஆன் 9:72 )

No comments:

Post a Comment