அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 30, 2011

அல்லாஹ்வை நம்புதல்


 அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம்யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வதுஅவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும்அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள்சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்  ­­ 


வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்றுஇருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.) அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).  
நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திருக்கிறான் என்று கூறினாள். நான்யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளைஉரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.  ­
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (­லி) நூல் : முஸ்லிம் (836)  

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று கூறுவதுகூடாது. இவ்வாறு கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ்தான் அர்ஷில் இருப்பதாகக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்வதுகூடாது அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா? நாம் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறுஅமர்வது அவனுக்குத் தகுதியானதோ அவ்விதத்தில் அமர்ந்திருக்கிறான்எனக்கண்டோம். ஆனால் பின்வரும் வசனங்களில் அல்லாஹ்பொறுமையாளர்களுடனும் (2 53) இறையச்சமுடையவர்களுடனும் ( 2 194 ) இறைநம்பிக்கையாளர்களுடனும் ( 8 19) நன்மையான காரியங்கள் (16 127) செய்பவர்களுடனும்மேலும் 5 12 57 4 ஆகிய வசனங்களில் அனைத்து மக்களுடனும் அல்லாஹ்இருப்பதாகக் கூறுகிறான். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதின்கருத்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய ஒவ்வொருசெயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகும்.  

இதனை பின்வரும் வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ்மூஸா ( அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்கதளையும் ஃபிர்அவ்னிடம்சென்று சத்தியத்தைக் கூறுமாறு அனுப்பும் போதுஅஞ்சாதீர்கள்! நான் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)  

அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவைகளைகேட்பதின் மூலமும் நம்முடன் இருக்கிறான். இறைவன் நம்முடன் இருக்கிறான்என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களை பாதுகாத்துவைத்துக் கொள்வான் என்பதாகும். அர்ஷ் அர்ஷ் என்பது அவனுடைய மிகப்பிரம்மாண்டமான ஆசனமாகும். ”ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும்அதிபதி யார்?” எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)  
அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255) அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர்வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17) அல்லாஹ்வின் தோற்றம் இறைவன்உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில்நல்லடியார்கள் காண்பார்கள். அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமதுஇறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23) 
  
அல்லாஹ்வின் உருவம் 
மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றிஎண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல்தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.  
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி­) நூல் : புகாரீ (7439)  
இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான் : அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்
(அல்குர்ஆன் 42:11) அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா? இவ்வுலகில் யாரும்அல்லாஹ்வைப் காண முடியாது அல்லாஹ் கூறுகிறான் : அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் 6:103)  

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போதுஎன் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ”என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்தமலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப்பார்க்கலாம்என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போதுஅதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போதுநீதூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான்முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)  
நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்றுகேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்றுகூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி­) நூல் : முஸ்லிம்  (261) 

மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள். அந்நாளில் சில முகங்கள்மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில்நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்கஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்றுகூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில்நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில்ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில்கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்கமாட்டீர்கள். அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(­) நூல் : புகாரீ (4581)  

மருமையில் காஃபிர்
காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள். அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15) அழகிய திருநாமங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமேஅவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள்! அவர்கள்அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்றுஅழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளனஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)

No comments:

Post a Comment