அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 31, 2011

பிறந்தநாள்


நம் மக்களில் பெரும்பாலனோர் பிறந்தநாள் கொண்டாட கூடியர்களாக இருக்கின்றனர். ஆனால் உண்மையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது  இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து 
மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான 
காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் 
பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.


பெண்கள் மழித்துக் கொள்ளுதல்


பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

Jan 30, 2011

அல்லாஹ்வை நம்புதல்


 அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம்யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வதுஅவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும்அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள்சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்  ­­ 

Jan 28, 2011

பொறாமை கொள்பவன்

மனிதன்  தன்னிடம் இல்லாத  ஏதோ ஒன்று திறமையோ அல்லது பணமோ அதை பிறரிடம் காணும் போது அவர் மீது பொறாமை கொள்கிறான். அதை அல்லாஹ் தான் அவர்களுக்கு  கொடுத்திருக்கிறான் என்பதை அவர்கள் உணரவில்லை. இத்தகைய மனோநிலை மனிதனிலே காணப்படும் மிகவும் இழிவான பண்பாகும். தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை, உயர்வுகளை அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதர்களுக்கிடையிலான உறவுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்து விட முடியும்.

Jan 26, 2011

செய்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்  உரித்தானது
உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தலும்  கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நரகத்திற்கு செல்லும் வழி

அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனுக்கும்,  நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிகளுக்கும்  வேட்டு வைத்து விட்டு மார்க்கத்துக்கு முரண்பட்ட விசயங்களையும் விவகாரங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மூட நம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் அரங்கேற்றிவிட்டு அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தி வழிபாடு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.மக்கள் மத்தியில் மலிந்து போகியுள்ள ஷிர்க், பித்அத்களை கண்டித்து தூய்மையான குர்ஆன் மற்றும் ஹதிஸ்களை  போதிக்கின்ற போது பகிரங்கமாகவே மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். சில ஆலிம்களும் உலமாக்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

பாலும் - குர்ஆனும்

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.

Jan 25, 2011

தர்கா வழிபடு இணை வைத்தலே

பாவங்களில் மிகப் பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணை வைத்தலாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அனைத்து  பாவங்களையும்  மன்னிகின்றான். ஆனால்   அவனுக்கு இணை வைத்தலை ஒருபோதும் மன்னிப்பதில்லை.தர்கா வழிபாடு என்பது மிகப்பெரும் இணை வைத்தலாகும். இன்று நம் மக்களில் சிலர் பள்ளிக்கு செல்வதை விட கப்ருகளுக்கும், தர்காகளுக்கும் செல்வதையே கடமை என  நினைக்கிறார்கள். இதனால் கிடைக்கும் பரிசு "நிரந்தர நரகமே" தவிர வேறு ஒன்றும் இல்லை .ஆகவே அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

Jan 24, 2011

தஜ்ஜால் வருகை

'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.
'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள். 
அறிவிப்பாளர் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) நூல் - (முஸ்லிம்).

Jan 22, 2011

தற்கொலையும் - இஸ்லாமும்

தற்கொலையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்தில்லை . சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனிஇயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

வட்டி வாங்குதல்

திருக்குர்ஆனில் அல்லாஹ், வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் போர்ப் பிரகடனம் செய்வதாக அறிவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் (உங்களுக்கு வர வேண்டிய) வட்டிப் பாக்கியை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள்” 
அல் குர் ஆன்(2:278,279)

Jan 21, 2011

சொர்க்கத்தில் வெள்ளிக்கிழமை

 இவ்வுலகில் வெள்ளிக்கிழமை தனி மகிமை இருப்பது போலவே மறுமையில் சொர்க்கத்திலும் இந்த தினத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்)சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு  
வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று

Jan 19, 2011

சுலைமான் நபியின் வரலாறு

சுலைமான் நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

உலகம்-மறுமை

உலகம் நமக்கு ! நாம் மறுமைக்கு!! .தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு,  பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக  உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.

Jan 18, 2011

கஃபா வரலாறு

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஃபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

மார்கத்தை விற்க்காதிர்கள்

  உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!  
(அல்குர்ஆன் 2:41)   
    தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. 
(அல்குர்ஆன் 5:44, 3:187, 3:199)

Jan 17, 2011

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு


திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்ளும்  அவசியம் நமக்கு உள்ளது.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

Jan 16, 2011

கியாமத் நாளின் அடையாளங்கள்

மகளின் தயவில் தாய்..
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   
நூல்: புகாரி (4777, 50)    

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)    
நூல்: புகாரி (4777)  

பித் அத்

நமது மார்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால்  அது நிராகரிக்கப்படும்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி : (2697) , முஸ்லிம் (3242)

மரணத்திற்குப் பின் தொடரும் நன்மைகள்

இறந்தவர்களுக்கு தொடர்ந்து நன்மை கிடைக்க வேண்டுமானால் உயிருடன் இருக்கும்போதே நல்லறங்களைச் செய்தால் ,அது இறந்த பின்பும் அதன் நன்மை நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மரணித்த பின்பும் நன்மைகளை பெற்று தரும் செயல்கள் மூன்று 

நன்மை பயக்கும் நபிமொழி


அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு விஷயங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க விருப்பம் கொடுக்கப்படும் போதுபாவமானதாக இல்லாதவரை அவ்விரண்டில் மிக இலகுவானதையே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்அது பாவமானதாக இருந்தால்அதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூரமாக ஒதுங்கி விடுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயத்திலும் தனக்காக எப்போதும் பழிவாங்கியதில்லைஎனினும்அல்லாஹ்வின் கண்ணியம் சேதப்படும் போதுஅல்லாஹ்வுக்காக அவர்கள் பழிவாங்காமல் இருந்ததில்லை (புகாரிமுஸ்லிம்)

Jan 10, 2011

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது;... மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:53)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை:

ASSALAMU ALAIKUM 
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை:


இதற்கு முன் என்றுமே இருந்திரா...த அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும்.