அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 21, 2011

சொர்க்கத்தில் வெள்ளிக்கிழமை

 இவ்வுலகில் வெள்ளிக்கிழமை தனி மகிமை இருப்பது போலவே மறுமையில் சொர்க்கத்திலும் இந்த தினத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்)சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு  
வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று

வீசி அவர்களுடைய முகங்களிலும், ஆடையிலும் கஸ்தூரி மண்ணை வாரிப்போடும்.உடனே அவர்கள் மென்மேலும் அழகும், பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும்,  
பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம்  
திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியார் எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுததலான அழகும், பொலிவும் பெற்று விட்டிர்களே என்று அதற்கு அவர்கள் அல்லாஹ்வின்
மீதாணையாக நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும், பொலிவும் பெற்றிருக்கிறிர்கள்.என்று  கூறுவர்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம் (5448)


 இந்த ரம்மியமான அனுபவம் சொர்க்கத்தின்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழும் என்று நபிகளார் கூரியுள்ளார்கள் எனும்போது சொர்க்கத்திலும் இதன் சிறப்பு தொடர்கிறது என்பது உண்மைதானே


ஸலவாத் கூறுதல்:        வெள்ளிக்கிழமை நாம் செய்ய வேண்டிய காரியங்களில் குறிப்பாக நபிகள் நாயகத்திற்கு துஆ செய்யும் விதமாக (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூற வேண்டும். இதை அவர்களே வலியுறுத்தி கூறுகின்றார்கள்.


  ஜும்ஆ தினம் என்பது உங்கள் நாள்களில் மிகவும் சிறந்த தினமாகும். அதிலே தான் ஆதம் அலை அவர்கள் படைக்கபட்டுள்ளர்கள். இன்னும் கைபற்றபட்டார்கள்  .அதிலே தான் சூர் ஊதுதல் உள்ளது. எனவே அந்நாளில் என் மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். ஏனெனில் உங்கள் ஸலவாத் எனக்கு எடுத்துக் கூறபடுகின்றது.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி) நஸயி :(1357) 

No comments:

Post a Comment